Vijay: விஜய்யை கண்கலங்க வைத்த கேரள ரசிகர்கள்… ரியல் சேட்டனாக மாறிய தளபதி!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார் விஜய்.

Mar 23, 2024 - 12:09
0 275
Vijay: விஜய்யை கண்கலங்க வைத்த கேரள ரசிகர்கள்… ரியல் சேட்டனாக மாறிய தளபதி!

கோலிவுட்டின் மாஸ் ஹீரோ, பாக்ஸ் ஆபிஸ்ஸின் பாயும் புலி, ஆக்‌ஷனின் Whole Sale டீலர் இப்படி வெரைட்டி வெரைட்டியாக கெத்து காட்டும் விஜய், கேரளாவில் தத்துப் பிள்ளையானதுதான் இப்போதையை ஹாட் நியூஸ். விஜய்யின் படங்கள் கேரளாவில் ரிலீஸானால் மல்லுவுட் ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியாது. விடிய விடிய கொண்டாட்டம், அதிகாலை 4 மணிக்கு First Day First Show, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஒரு 50 கோடி என விஜய்யை கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். 

விஜய்யின் படங்களுக்கே அப்படி என்றால், இப்போ அவரே கேரளா சென்றுள்ளார். கோட் படத்தின் ஷூட்டிங்குக்காக திருவனந்தபுரம் சென்ற விஜய்யை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வர, மல்லுவுட் சமஸ்தானமே ஒருநிமிடம் ஆடிதான் போய்விட்டது. விஜய் கேரளாவில் காலடி எடுத்து வைத்த கடந்த 5 நாட்களும் இதே Vibe தான். விட்டால் கேரளாவில் ஒரு வீடு கட்டிக் கொடுத்து, அதே அட்ரஸில் ஆதார் கார்டும் எடுத்துக் கொடுத்திருப்பார்கள் சேட்டன்மார்கள்.

போதாக்குறைக்கு ‘கேரளா வெற்றிக் கழகம்-னு, அங்கும் ஒரு கட்சியை ஆரம்பித்து கிலோ மீட்டருக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகன்கள் வலம் வரத் தொடங்கியிருப்பார்கள். கேரள ரசிகர்களின் இந்த பேரன்பை கண்டு விஜய்யே பேய் அடித்தார் போல மிரண்டு போய் விட்டாராம். ஷூட்டிங் பிரேக்கில் விஜய் ரெஸ்ட் எடுக்க கேரவன் இருக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் ஹைட்டான இடத்தில் நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கவாவது தளபதி செல்லுமிடம் எல்லாம் கேரவனை கொண்டு சென்றுவிடுகின்றனர்.

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் போல, கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து எடுத்தே விஜய்யின் கண்கள் சிவந்துவிட்டன. ஒருகட்டத்தில் ரொம்பவே எமோஷனாலன விஜய், கண்ணீர் விட்டு அழுதேவிட்டார். அதோடு விட்டாரா, “என்டே அணியாதிமார், அணியன்மார், சேட்டன்மார், சேச்சிமார், அம்மாமார்! எல்லா மலையாளிகளுக்கும் என்ட ஹிருதயம் நிரஞ்ச நன்னி என விஜய் மலையாளத்தில் உருக, அதனைக் கேட்டு பதிலுக்கு சேட்டன்களும் மருக அந்த இடமே கண்ணீர் கடலில் மூழ்கிவிட்டது.

இந்த செல்ஃபி வீடியோவை விஜய் தனது டிவிட்டரிலும் ஷேர் செய்து, சேட்டன்மார்களுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதையெல்லாம் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, தமிழ்நாட்டில் கோட் அவுட்டானாலும், கேரளாவில் 100 கோடி கன்ஃபார்ம் என மங்காத்தா அஜித் போல சிரித்துக் கொண்டிருக்கிறாராம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User