Vijay Sethupathi: “துபாய் Life இவ்ளோ தான்..” மஹாராஜா ப்ரோமோஷனில் எமோஷனலான விஜய் சேதுபதி!

மகாராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிக்க வருவதற்கு முன்பு துபாயில் வேலை பார்த்தது குறித்து விஜய் சேதுபதி எமோஷனலாக பேசியது வைரலாகி வருகிறது.

Jun 10, 2024 - 16:04
0 394
Vijay Sethupathi: “துபாய் Life இவ்ளோ தான்..” மஹாராஜா ப்ரோமோஷனில் எமோஷனலான விஜய் சேதுபதி!

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகாராஜா வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகாராஜா படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக இந்த ட்ரெய்லர் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் ஸ்க்ரீன் செய்யப்பட்டது. இதனால் விஜய் சேதுபதியும் மகாராஜா படக்குழுவினரும் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னதாக விஜய் சேதுபதி துபாயில் தான் வேலை பார்த்து வந்தார். காலேஜ் முடித்ததும் துபாய் சென்ற விஜய் சேதுபதி, அங்கு அக்கவுண்டட்டாக வேலை பார்த்ததாக அவரே பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனாலும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையை விடமுடியாத விஜய் சேதுபதி, துபாயில் இருந்து சென்னைக்கே திரும்பி வந்துவிட்டார். அதேபோல் தான் நினைத்தபடி கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராகவும் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், மகாராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, அவரது துபாய் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது “துபாயில் வேலை பார்த்த போது ஒரு திர்ஹாம் வைத்துக்கொண்டு ஒரு கூல்ட்ரிங்ஸ் வாங்குவதற்கு கூட யோசிக்க வேன்டும். நினைத்தபடி எல்லாம் வாங்கினால் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாது. துபாயில் வேலைக்காக சென்ற எல்லோருக்கும் இதேதான் நிலை. வியாழன் அன்று நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி பிரியாணி சமைத்து சாப்பிடுவோம். பின்னர் துணி துவைத்துவிட்டு பீச் செல்வது வழக்கம். மற்றபடி ரூம் கிளின் செய்வதும் பாத்ரூம் சுத்தம் பண்றதும் தான் துபாய் வாழ்க்கை. அங்கிருந்தபடி கொண்டாட்டமாக இருப்பதை போல கனவு கூட காண முடியாது” எனக் கூறினார்.

அதேபோல், துபாயில் ஏக்கத்தோடு சுற்றிக்கொண்டிருந்த போது, இதே இடத்தில் எனக்கு ஒரு பரிசு இருக்கு என்பது எனக்கே தெரியாமல் இருந்தது. இப்படித்தான் வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளுக்கு பின்னாடியும் இன்னொரு நாளின் முடிச்சு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷுடன் புதுப்பேட்டை உட்பட பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ள விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா அளவில் பிஸியாக வலம் வருகிறார். பல தடைகளை கடந்து தான் நினைத்ததை சாதித்துள்ள விஜய் சேதுபதி, தனது துபாய் வாழ்க்கை பற்றி எமோஷனலாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User