Arjun: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம்... திரண்ட திரை நட்சத்திரங்கள்!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

Jun 10, 2024 - 17:39
0 560
Arjun: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம்... திரண்ட திரை நட்சத்திரங்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் ஆக்ஷன் ஹீரோவாக கொடி கட்டிப் பறந்தவர் அர்ஜுன். இதனாலேயே அவருக்கு ஆக்ஷன் கிங் என்ற டைட்டில் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினர். லியோவில் விஜய்க்கு வில்லனாக மிரட்டிய அர்ஜுன், தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் நடித்து வந்த நிலையில், இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றது. கமெடியனாக அறிமுகமாகி தற்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வருகிறார் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதியும் நடிகராகிவிட்ட நிலையில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கரம் பிடித்துள்ளார்.  

கடந்தாண்டு அக்டோபரில் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து இன்று இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அர்ஜூனுக்கு சொந்தமான கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இதில், விஷால், சமுத்திரகனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை தொடர்ந்து ஜூன் 14ம் தேதி சென்னை நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மணியார் குடும்பம், அதாகப்பட்டது மகாஜனங்களே, தண்ணி வண்டி, பித்தல மாத்தி படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் உமாபதி. இந்தப் படங்களை விடவும், அர்ஜூன் ஹோஸ்ட் செய்த சர்வைவர் என்ற டிவி ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றபோது ரொம்பவே பிரபலமானார். அப்போதுதான் உமாபதி, ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனையறிந்த இருவீட்டாரும் அவர்களது காதலுக்கு பச்சைகொடி காட்டியதோடு, இப்போது திருமணமும் நடத்தி வைத்துள்ளனர். இந்தத் திருமண விழாவில் அர்ஜுன், தம்பி ராமையா இருவருமே பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் வலம் வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 4
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User