Vijay Election: கையில் காயத்துடன் வந்த விஜய்… சுற்றி வளைத்த ரசிகர்கள்… பதட்டமான வாக்குச் சாவடி!

கோட் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த விஜய், இன்று சென்னை திரும்பிய வேகத்தில் ஓட்டுப் போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.

Apr 19, 2024 - 12:48
0 317
Vijay Election: கையில் காயத்துடன் வந்த விஜய்… சுற்றி வளைத்த ரசிகர்கள்… பதட்டமான வாக்குச் சாவடி!

சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் பிஸியாகவுள்ள அவர் அடுத்து தளபதி 69-ல் மட்டுமே நடிக்கவுள்ளார். அதுவே விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்காக ரஷ்யா சென்றிருந்தார் விஜய். இதனால் அவர் வாக்களிக்க சென்னை வருவாரா மாட்டாரா என்பது சந்தேகமாக இருந்தது.  

ஆனால் ரஷ்யாவில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய விஜய், நீலாங்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார். வீட்டில் இருந்து காரில் சென்ற விஜய்யை, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் விரட்டிச் சென்றதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. அதேபோல், விஜய் வாக்குச் சாவடி சென்றதும் அங்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய்யை அங்கிருந்த போலீஸார் பாதுகாப்பாக வாக்குச் சாவடி உள்ளே அழைத்துச் சென்றனர்.  

அப்போது விஜய்யின் கையில் பிளாஸ்த்ரி ஒட்டப்பட்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது கோட் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தெரியவில்லை. விஜய் வாக்களிக்க வந்து சென்ற சில நிமிடங்கள், வாக்குச் சாவடி மட்டுமின்றி அப்பகுதி முழுவதுமே பதற்றமாக இருந்தால் பொதுமக்களும் வாக்களிக்கச் சென்றவர்களும் அதிருப்தி அடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User