Vijay Antony: “ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க..” ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக பொங்கிய விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. இப்படத்தை நெகட்டிவாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை விஜ்ய் ஆண்டனி கடுமையாக ட்ரோல் செய்துள்ளார்.

Apr 20, 2024 - 10:40
0 405
Vijay Antony: “ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க..” ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக பொங்கிய விஜய் ஆண்டனி!

சென்னை: இசையமைப்பாளராக சினிமாவில் என்ட்ரியான விஜய் ஆண்டனி இப்போது ஹீரோ, டைரக்டர், எடிட்டர், தயாரிப்பாளர் என குட்டி சகலகலா வல்லவனாக வலம் வருகிறார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புதிதில் நான், சலீம் அதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், அதன்பின்னர் விஜய் ஆண்டனியின் படங்களுக்கு எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ரோமியோ திரையரங்குகளில் ரிலீஸானது.  

விஜய் ஆண்டனி ஜோடியாக மிருணாளினி ரவி நடித்த இந்தப் படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். ரோமியோவுடன் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டியர் திரைப்படமும் ரிலீஸானது. இந்த இரண்டுமே வசூலில் ஏமாற்றம் கொடுத்ததாக கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ப்ளூ சட்டை மாறனும் தனது விமர்சனத்தில் ரோமியோ படத்தை பங்கமாக ட்ரோல் செய்திருந்தார். ரோமியோ படத்தின் கதை, திரைக்கதை சுத்தமாக எடுபடவில்லை என விமர்சித்த அவர், விஜய் ஆண்டனியின் நடிப்பு ஒரே மாதிரியாக இருப்பதாகவும் ட்ரோல் செய்திருந்தார்.  

அதாவது, ஆக்‌ஷன் சீன், சென்டிமெண்ட், ரொமான்ஸ், சோகம் என எதுவாக இருந்தாலும் விஜய் ஆண்டனிக்கு வித்தியாசம் காட்டி நடிக்கத் தெரியவில்லை என பங்கமாக சம்பவம் செய்திருந்தார். இதனால் கடுப்பான விஜய் ஆண்டனி, ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக டிவிட்டரில் போர் தொடுத்துள்ளார். அதில் அவர் ரோமியோ படத்தை கமலின் அன்பே சிவம் உடன் ஒப்பிட்டுள்ளது ரசிகர்களை மிரள வைத்துள்ளது.  

“பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த டிவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் விதவிதமாக ரியாக்‌ஷன் கொடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User