VidaaMuyarchi: தீபாவளி ரேஸில் விடாமுயற்சி..? அஜித் தரப்பில் இருந்து வந்த மாஸ் அப்டேட்!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து செம்ம மாஸ்ஸான அப்டேட் வெளியாகியுள்ளது.

Jun 19, 2024 - 16:58
0 282
VidaaMuyarchi: தீபாவளி ரேஸில் விடாமுயற்சி..? அஜித் தரப்பில் இருந்து வந்த மாஸ் அப்டேட்!

சென்னை: அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முன்னதாக விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார் அஜித். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். ஆனால் திடீரென விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. பட்ஜெட் பிரச்சினை காரணமாக தான் விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

அதேபோல், தொடர்ந்து இந்தப் படத்தை தயாரிக்க லைகா நிறுவனத்திடம் பட்ஜெட் இல்லை என்பதால், விடாமுயற்சி ட்ராப் ஆகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனையடுத்து விடாமுயற்சி ட்ராப் ஆகவில்லை என ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக, ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளான மேக்கிங் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவும் வந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதேநேரம் அஜித்தும் குட் பேட் அக்லி படத்தில் பிஸியாக காணப்பட்டார். 

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வரும் 24ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இதுகுறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் செல்லவிருப்பதாகவும், ஜூன் 24 முதல் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை தீபாவளி ரேஸில் களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

விடாமுயற்சி தீபாவளிக்கு ரிலீஸாகவிருப்பது குறித்து வெளியான தகவலால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை இந்தாண்டு தீபாவளி தினத்தில் ரிலீஸாகும் படங்கள் பற்றி எந்தவிதமான அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. இதில் அஜித்தின் விடாமுயற்சி முதல் படமாக இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ஜூன் 24ம் தேதி அஜர்பைஜானில் தொடங்கும் படப்பிடிப்பு முடிவுக்கு வந்த பின்னரே, விடாமுயற்சி ரிலீஸ் குறித்து அபிஸியலாக அறிவிக்கவுள்ளதாம் படக்குழு. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User