Vettaiyan: தோஸ்த் படா தோஸ்த்… வேட்டையன் ஸ்பாட்டில் Vibe கொடுத்த ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்!

வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அப்போது ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

May 03, 2024 - 16:59
Updated: 2 years ago
0 298
Vettaiyan: தோஸ்த் படா தோஸ்த்… வேட்டையன் ஸ்பாட்டில் Vibe கொடுத்த ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்!

மும்பை: ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார் ரஜினிகாந்த். லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனையடுத்து இறுதிக்கட்ட பணிகளை அசுர வேகத்தில் தீவிரப்படுத்தியுள்ளார் தசெ ஞானவேல். ரஜினியும் விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த மாதம் தான் கூலி டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மேலும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக வேட்டையனை முடித்துவிட வேண்டும் என ரஜினி கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வேட்டையன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மும்பையில் தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த். இதற்காக அவர் மும்பை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடிக்கிறார். ஏற்கனவே ரஜினி, அமிதாப் இணைந்து நடித்த காட்சிகளை மும்பையில் ஷூட் செய்திருந்தார் தசெ ஞானவேல். இப்போது மீண்டும் மும்பையில் நடக்கும் வேட்டையன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் அமிதாப் பச்சன். அப்போது ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் ரஜினியும் அமிதாப்பும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடியும் சீரியஸாக பேசிக்கொண்டிருப்பதாகவும் இருக்கின்றனர். வேட்டையன் பல வருடங்களுக்குப் பின்னர் ரஜினியுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல், பிரபாஸின் கல்கி படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் அமிதாப் பச்சன். ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இருவருடனும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User