உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்

உதயநிதியின் 49-வது பிறந்தநாள் திமுகவினரால் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நிர்வாகிகள் உதயநிதிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பிரியாணி, ஆடல் பாடல் என உற்சாக கொண்டாடப்பட்டது. 

Nov 27, 2025 - 10:55
0 273
உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்
dance and songs at Kurinji's house

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து சிஐடி காலணியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற உதயநிதி, அவரிடம் ஆசி பெற்றதோடு, அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதன் பின்னர் மதியம் நிர்வாகிகள் அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள உதயநிதியின் குறிஞ்சிஇல்லத்திற்கு படையெடுக்க தொடங்கினார். கரகாட்டம், ஓலியாட்டம் என ஆடல், பாடலுடன் அப்பகுதி முழுவதும் களைக்கட்டியது. பச்சை கலரில் புடவை அணிந்த வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பசுமை வழிசாலையில் நடனம் ஆடிய படி குறிஞ்சி இல்லத்தை நோக்கி சென்றனர். 

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரன் ஆயிரம் பேருடன் வருகை தந்து உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அதுமட்டுமின்றி, பலாப்பழம், செவ்வாழை என பழங்களுடன் சீர்வரிசைகளும் உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.

இப்படி பிறந்தநாள் கூற வந்த நிர்வாகிகளுக்கு பேக் செய்து வைக்கப்பட்டிருந்து பிரியாணி டப்பாக்கள் கொடுக்கப்பட்டது. உற்சாகம் களைப்புரண்டு ஓடியது. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User