தங்கம் விலை.. ஜெட் வேகத்தில் உயர்வு... ஒரு சவரன் 53,000 ரூபாயை தாண்டியது.. இப்போ வாங்குவது லாபமா?

தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ. 6,660 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 53,280என்ற நிலையில் விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Apr 08, 2024 - 10:16
0 494
தங்கம் விலை.. ஜெட் வேகத்தில் உயர்வு... ஒரு சவரன் 53,000 ரூபாயை தாண்டியது.. இப்போ வாங்குவது லாபமா?

தங்கம் இந்திய பெண்களின் முதலீடுகளில் முக்கியமானது. திருமணத்தின் போது மகள்களுக்கு சீதனம் தருவதற்காகவே தங்கத்தை வாங்கி சேகரிப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சவரன் தங்கம் ரூ.5000 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆண்டுக்காண்டு தங்கத்தின் விலை படிப்படியா உயர்ந்து வருகிறது. 

பிப்ரவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,000க்கு மேல் இருந்த நிலையில், தற்போது ரூ.53,000த்தை தாண்டியுள்ளது. ஒரே மாதத்தில் தங்கத்தின் விலை கிட்டதட்ட சவரனுக்கு ரூ.7,000 வரை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களாகவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. புதிய உச்சம் தொட்டுள்ளது.  நேற்றைய தினம் தங்கம் விலை

ஏப்ரல் 8ம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6660ஆக விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 53,280என்ற நிலையில் விற்பனையாகிறது. 

முதலீடு செய்யப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.7,130 ஆக விற்பனையாகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.57,040 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து கிராம் 85க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து ரூ.85,000க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.88ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.88,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் தங்கம் 8000 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தில் இப்போது முதலீடு செய்வது லாபகரமானதாகவே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User