Thalaivar171: ரஜினியுடன் மீண்டும் இணையும் தளபதி பிரபலம்… அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 171 அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் இணைந்துள்ள பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Apr 08, 2024 - 10:59
0 273
Thalaivar171: ரஜினியுடன் மீண்டும் இணையும் தளபதி பிரபலம்… அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 171 அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். தசெ ஞானவேல் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அதேநேரம் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் நவராத்திரி பூஜை விடுமுறை நாட்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனால் அடுத்து தலைவர் 171 டைட்டில் டீசருக்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் ‘கழுகு என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டைட்டில் டீசர் வெளியாகும் போது இது உண்மை தானா என்பது தெரியவரும். அதேபோல், தலைவர் 171ல் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.  

அதேபோல் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியுடன் சிவா, தளபதி படங்களில் ஜோடியாக நடித்தவர் ஷோபனா. தளபதி படத்தில் ரஜினி – ஷோபனா காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னர் இக்கூட்டணி இணைந்து நடிக்காத நிலையில், தற்போது தலைவர் 171 படத்தில் ரஜினி ஜோடியாக ஷோபனாவை கமிட் செய்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். 

ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் டைட்டில் டீசரில் இதுபற்றியும் அபிஸியலாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட மேலும் சில முன்னணி நடிகர்கள் தலைவர் 171 படத்தில் இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User