உறவினர் இறப்பிற்கு கடை அடைக்கச் சொல்லி அடாவடி செய்த ரவுடி கும்பல்

திருவள்ளுவர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

Dec 09, 2023 - 17:19
Updated: 3 years ago
0 141
உறவினர் இறப்பிற்கு கடை அடைக்கச் சொல்லி அடாவடி செய்த ரவுடி கும்பல்

திருவள்ளூர் அருகே உறவினர் இறப்பிற்கு கடை அடைக்ககோரி கடை உரிமையாளர்களை கத்தியைக்கொண்டு தாக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூர் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல் ( வயது 51).இவர் சமையல் மாஸ்டர் ஆவார். கடந்த 7ம் தேதியன்று மயில்வேல் சத்தரை பகுதியில் உள்ள குட்டையில்  குளிக்கும் போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி பலியானார். இதைத்தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நரசிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்றது. அப்போது நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த முகிந்தர் அமர்நாத் என்கின்ற முகிந்தர் மற்றும் வினோத் குமார் என்கின்ற பாபா,பிரவீன் ஆகிய 3 பேரும் மயில்வேல் இறந்த காரணத்தால் அப்பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு கூறி ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவர்கள்  நரசிங்கபுரம் பகுதியில் கறிக்கடை  வைத்து நடத்தி வந்த வினோத்குமார் என்பவரின் கறிக்கடை மூடுமாறு கூறி உள்ளனர்.அதற்காக  அவர் கடையை மூட மறுப்பு தெரிவித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 3 பேரும் கறிக்கடை உரிமையாளரான வினோத்குமாரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் இடது பக்க கையில் வெட்டிவிட்டு கொலை செய்து விடுவதாக  மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். 

இதில் காயமடைந்த அவர் திருவள்ளுவர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து வினோத்குமார் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் இது சம்பந்தமாக முகிந்தர் அமர்நாத் என்கின்ற முகிந்தர், வினோத்குமார் என்கின்ற பாபா, பிரவீன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User