Thug Life: STR-ன் தக் லைஃப் என்ட்ரி… Sigma Thug Rules… சஸ்பென்ஸ் வைத்த கமல்!

கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.

May 07, 2024 - 13:14
0 426
Thug Life: STR-ன் தக் லைஃப் என்ட்ரி… Sigma Thug Rules… சஸ்பென்ஸ் வைத்த கமல்!

சென்னை: கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 ஷூட்டிங் முடித்துவிட்டு தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்தார் கமல். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். 2022 நவம்பரில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது. பின்னர் கடந்தாண்டு கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.  

மேலும், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதையும் படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் தக் லைஃப் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்தப் படத்தில் இருந்து துல்கர் சல்மானும் ஜெயம் ரவியும் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. அது உண்மை தான் என தற்போது தெரிய வந்துள்ளது. அதேபோல், சிம்பு தக் லைஃப் டீமில் இணைந்துள்ளது பற்றியும் செய்திகள் வந்தன.  

அதனை உறுதி செய்யும் விதமாக, டெல்லியில் நடைபெறும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமலுடன், சிம்பு இருக்கும் போட்டோ வைரலானது. முக்கியமாக இந்த போட்டோவில் கமல்ஹாசன் சத்யா பட லுக்கில் இருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் புதிய ப்ரோமோ நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இது சிம்புவின் ப்ரோமோ வீடியோ என்பதை தற்போது வெளியன டீசர் மூலம் உறுதியாகியுள்ளது.  

அதாவது ‘Signa The Rulles’ என்ற கேப்ஷனுடன் நாளை காலை 10 மணிக்கு தக் லைஃப் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதில் Sigma Thug Rules என்பது சிம்புவின் STR என்பதன் ஷார்ட் வெர்ஷனாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தக் லைஃப் டைட்டில் டீசரில் கமல்ஹாசனின் கேரக்டரையும் படக்குழு அறிவித்தது. அதேபோல் நாளை வெளியாகும் சிம்புவின் கிளிம்ப்ஸ் வீடியோவில் அவரது கேரக்டர் பற்றிய அப்டேட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் மகனாக சிம்பு நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User