Thug Life: தேர்தல் முடிந்த கையோடு டெல்லி பறந்த கமல்… வேகமெடுக்கும் தக் லைஃப் ஷூட்டிங்!

மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியது.

Apr 22, 2024 - 12:18
0 271
Thug Life: தேர்தல் முடிந்த கையோடு டெல்லி பறந்த கமல்… வேகமெடுக்கும் தக் லைஃப் ஷூட்டிங்!

சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் தக் லைஃப் ஷூட்டிங் வேகமெடுத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டார். அதன் பின்னர் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்த கமல், தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருந்தார். ஆனால், கமல் இல்லாத காட்சிகளை தொடர்ந்து இயக்கி வந்தார் மணிரத்னம்.  

அதன்படி, ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் சிம்பு, த்ரிஷா ஆகியோர் பங்கேற்றதாக சொல்லப்பட்டது.  தக் லைஃப் டைட்டில் டீசர் வெளியான போது இப்படத்தில் சிம்பு நடிப்பது பற்றி எந்த அப்டேட்டும் வரவில்லை. அதேநேரம் சில தினங்களுக்கு முன்னர் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் விலகிவிட்டதாக வெளியான தகவல்களால் ரசிகர்களும் குழப்பமாகிவிட்டனர். ஆனால் அது உண்மையில்லை எனவும், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.  

இந்நிலையில் இன்று டெல்லியில் தொடங்கிய தக் லைஃப் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். அவருடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கெளதம் கார்த்திக் ஆகியோரும் டெல்லி ஷெட்யூலில் நடிக்கவுள்ளனர். இதில் கமல், சிம்பு ஆகியோர் நடிக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளை ஷூட் செய்ய மணிரத்னம் ப்ளான் செய்துள்ளாராம். அதேபோல், க்ளைமேக்ஸ் ஃபைட் சீக்வென்ஸ் முழுவதும் செர்பியாவில் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.

 

இனிவரும் நாட்களில் தக் லைஃப் ஷூட்டிங் பிரேக் இல்லாமல் நடைபெறும் எனவும், இந்தாண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தக் லைஃப் படத்தை அடுத்தாண்டு சம்மரில் ரிலீஸ் செய்துவிட கமலும் மணிரத்னமும் யோசித்து வருகிறார்களாம். இந்தாண்டு ஜூன் மாதம் இந்தியன் 2, கல்கி படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.       

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User