தமிழ்நாட்டில் இந்த கட்சி டெபாசிட் கூட வாங்காது.. சவால் விடுத்த திமுக கூட்டணி...

பாஜக தேசிய தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார். 

Mar 02, 2024 - 16:02
0 224
தமிழ்நாட்டில் இந்த கட்சி டெபாசிட் கூட வாங்காது.. சவால் விடுத்த திமுக கூட்டணி...

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓசூரில்  தனியார் மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, "தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறது.  அநாகரிகமாக விமர்சிக்க கூடிய தலைவராக நாகரிகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். இவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். 
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிந்தது. கூட்டணியில் எவ்வித சச்சரவும், சலசலப்பும் இல்லை. தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடக அரசு எவ்வித பணியையும் தொடங்க முடியாது" என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User