This Week OTT Release: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஹனுமான்… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் Full List இதோ!

ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் ஹனுமான் திரைப்படம் தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன, அதனை இங்கே பார்க்கலாம்.

Apr 04, 2024 - 16:08
0 242
This Week OTT Release: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஹனுமான்… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் Full List இதோ!

சென்னை: தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ஹனுமான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜியா, அம்ரிதா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். மேக்கிங், கிராபிக்ஸ் ஆகியவை மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இதனால் ஹனுமான் எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி கடந்த மாதம் ஹனுமான் தெலுங்கு வெர்ஷன் ஜீ 5 தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ஹனுமான் தமிழ், மலையாளம் உட்பட மற்ற மொழிகளில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.  

நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களுக்கு வெப் சீரிஸ் உட்பட படங்களும் வெளியாகின்றன. Ripley என்ற ஆங்கில வெப் சீரிஸ், Scoop என்ற ஆங்கில திரைப்படம் இந்த வாரம் வெளியாகின்றன. அதேபோல், Parasyte: The Grey என்ற வெப் சீரிஸ் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. கொரியன் வெப் சீரிஸ்ஸான இது ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், The Haunted Hotel என்ற இந்தோனேஷிய மொழி திரைப்படமும் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகிறது. 

அதேபோல் ஜூனி என்ற கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு படங்களான Lambasingi ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், ஆணவ கொலையை பின்னணியாக வைத்து உருவான கிஸ்மத் அமேசான் ப்ரைமிலும் வெளியாகின்றன. இதுதவிர மேலும் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதேநேரம் தமிழில் இந்த வாரம் படங்களோ வெப் சீரிஸ்களோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User