This Week OTT Release: மெர்ரி கிறிஸ்துமஸ் முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை… இந்த வாரம் OTT ரிலீஸ்

இந்த வாரம் மார்ச் 8ம் தேதி மெர்ரி கிறிஸ்துமஸ், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. இவையனைத்தும் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

Mar 07, 2024 - 17:04
0 463
This Week OTT Release: மெர்ரி கிறிஸ்துமஸ் முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை… இந்த வாரம் OTT ரிலீஸ்

இந்த வாரம் திரையரங்குகளை விட ஓடிடியில் ரசிகர்களுக்கு சிறப்பான சம்பவங்கள் காத்திருக்கின்றன. தற்போதெல்லாம் தியேட்டர் சென்று படங்கள் பார்ப்பதை விட குடும்பத்துடன் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் பொறுமை காத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த மெர்ரி கிறிஸ்துமஸ், வடக்குப்பட்டி ராமசாமி, டெவில், யாத்ரா 2, சூப்பர் செக்ஸ் வெப் சீரிஸ் ஆகியவை ஓடிடியில் வெளியாகின்றன.  

விஜய்  சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் கடந்த ஜனவரி 12ம் தேதி பொங்கலுக்கு வெளியானது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் மெர்ரி கிறிஸ்துமஸ் நாளை (மார்ச் 8) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனை தமிழ், இந்தி மொழிகளில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கார்த்திக் யோகி இயக்கத்தில் காமெடியில் அதகளம் செய்த வடக்குப்பட்டி ராமசாமி, தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அதன்படி, சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.  

விதார்த், பூர்ணா, மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் உருவான டெவில் பிப்ரவரி 2ம் தேதி ரிலீஸானது. இதுவும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, டென்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது டெவில். அதேபோல் தெலுங்கில் வெளியான யாத்ரா 2 திரைப்படமும் இந்த வாரம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. ஜீவா, மம்முட்டி நடித்த இந்தப் படம் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழில் தூக்குதுரை, நந்திவர்மன், எனக்கு என்டே கிடையாது ஆகிய படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. அதன்படி சதீஷ் நடித்த தூக்குதுரை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது, சுரேஷ் ரவி நடித்த நந்திவர்மன் டென்ட்கொட்டா தளத்திலும், எனக்கு எண்டே கிடையாது படம் ஆஹா தமிழ் தளத்திலும் வெளியாகின்றன. இதுதவிர ஹார்ட்பீட் என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஓடிடியில் ரிலீஸாகிறது.  

தெலுங்கில் ப்ரீத், சவுண்ட் பார்ட்டி படங்கள் ஆஹா ஓடிடியிலும், வலரி E TV தளத்திலும் வெளியாகின்றன. அதேபோல் சூப்பர் செக்ஸ் என்ற இத்தாலியன் வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகிறது. இதனுடன், தி பேக்கப் பிளான் (The Backup Plan), தி சிக்னல் (The Signal), டூ கில் ஏ டைகர் (To Kill A Tiger), ப்ளவுன் அவே (Blown Away), தி ஜென்டில்மேன் (The Gentle Man), குயின் ஆஃப் டியர்ஸ் (Queen Of Tears) ஆகியவையும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User