திருத்தணி: 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
திருத்தணி அருகே தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி அடுத்த பொன்பாடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி. இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விடியற்காலை வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில் மூதாட்டியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.மேலும் அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்பல் மற்றும் வீட்டிலிருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்று உள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூதாட்டியின் புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 24) என்ற வாலிபர் மூதாட்டியை பலாத்காரம் செய்து, நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சதீஷ்குமாரை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கத்தி முனையில் வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் திருத்தணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)