வார தொடக்க நாளே அட்டகாசம்: தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு

வாரத்தின் தொடக்க நாளான இன்று நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அமைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Mar 30, 2026 - 04:36
Updated: 4 months ago
0 327
வார தொடக்க நாளே அட்டகாசம்: தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு
தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை நிலையற்ற தன்மையில் உள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் விலை கணிசமாகக் குறைந்த வருகிறது. 

ஆனால் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனையனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம்  250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User