செந்தில் பாலாஜியை விடாமல் விரட்டியடிக்கும் நீதிமன்றம் !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 31, 2024 - 16:48
0 290
செந்தில் பாலாஜியை விடாமல் விரட்டியடிக்கும் நீதிமன்றம் !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் செந்தில் பாலாஜி  வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து அந்த  மனுவிற்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வழக்கின் விசாரணையை முடக்கி,குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டு பதிவை அல்ல என்றும் போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார். அதன் பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 18-வது முறையாக நீதிமன்ற காவல் செந்தில் பாலாஜிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User