பச்சைக்கிளி.. தங்கர் பச்சான் பார்த்த ஜோசியம்.. கிளி ஜோதிடரை கைது செய்த வனத்துறை

கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பச்சைக்கிளியை வைத்து ஜோசியம் பார்த்த ஜோசியரக்கே இந்த நிலைமை என்றால் ஜோதிடம் பார்த்த கிளிக்கு பழம் கொடுத்த தங்கர் பச்சானுக்கு நிலை என்ன என்று பரபரப்பாகி இருக்கிறது கடலூர் தேர்தல் களம்.

Apr 09, 2024 - 15:56
0 201
பச்சைக்கிளி.. தங்கர் பச்சான் பார்த்த ஜோசியம்.. கிளி ஜோதிடரை கைது செய்த வனத்துறை

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, கடலூர் தொகுதியில் பிரபல இயக்குநர் தங்கர் பச்சானை களம் இறக்கி உள்ளது.  மச்சனா? பச்சனா என்று பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காரணம் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள விஷ்ணு பிரசாத் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மச்சான். எனவேதான் தனது மச்சானை விட தங்கர் பச்சானின் வெற்றிதான் முக்கியம் என்று பிரச்சாரம் செய்து வருகிறார் அன்புமணி. 

கடலூரில் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வரும் தங்கர்பச்சான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தென்னம்பாக்கம் பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து கொண்டு இருந்த போது, தனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து கிளி ஜோசியம் பார்த்தார். 

பச்சைக்கிளி பார்த்த ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வர, தேர்தலில் வெற்றி தான் என ஜோசியக்காரர் சொல்ல பூரித்து போனார் தங்கர் பச்சான். 
தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவ யார் கண் பட்டதோ தற்போது கிளி ஜோசியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கிளியை கூண்டில் அடைத்து கொடுமை படுத்தியதாக வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பச்சைக்கிளியை வைத்து ஜோசியம் பார்த்தது குத்தமாயா என்ன புலம்பல் தங்கர் பச்சான் தரப்பில் இருந்து கேட்க முடிகிறது. பச்சைக்கிளியை வைத்து ஜோசியம் பார்த்த ஜோசியரக்கே இந்த நிலைமை என்றால் ஜோதிடம் பார்த்த கிளிக்கு பழம் கொடுத்த தங்கர் பச்சானுக்கு நிலை என்ன என்று பரபரப்பாகி இருக்கிறது கடலூர் தேர்தல் களம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User