மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. விரலை வெட்டி காளிக்கு ரத்த காணிக்கை.. அதிர்ந்த கர்நாடகா

பிரதமர் மோடி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமராக வேண்டும் என்பதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த நபர் காளி கோயிலில் தனது விரலை வெட்டி ரத்தத்தை காணிக்கையாக்கியுள்ளார்.

Apr 09, 2024 - 15:36
0 260
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. விரலை வெட்டி காளிக்கு ரத்த காணிக்கை.. அதிர்ந்த கர்நாடகா

கர்நாடக மாநிலம் கார்வார் நகரில் வசித்து வருபவர் வர்னேகர். இவர் ஒரு மோடி வெறியர். மோடிக்காக தனது வீட்டிலேயே ஒரு காளி கோயிலைக் கட்டி, அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மூன்றாவது முறையாக பிரதமாக பதவியேற்க வேண்டும் என்பதே வர்னேகரின் ஆசை. அதற்காக, அவர் கட்டிய கோயிலில் தனது விரலை துண்டாக வெட்டி கையில் இருந்து வந்த ரத்தத்தை காளிக்கு காணிக்கையாக்கி வேண்டிக்கொண்டார்.

அவரது நடவடிக்கை குறித்து பேசியுள்ள அக்கம் பக்கத்தினர்,  எப்போது மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தாரோ, அப்போதிருந்து அண்டை நாடுகள் நட்பு பாராட்டுகின்றன. மோடி அவர்களின் நடவடிக்கைகளால், காஷ்மீரில் அமைதி நிலவுகிறது, ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது குறைந்துள்ளது. 

மோடியை நம்பியே ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது என்று வர்னேகர் ஆழ்மனதில் பதிந்துள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதே நபர், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக விரலை வெட்டி காளிக்கு காணிக்கையாக்க முயறுள்ளார், ஆனால் அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User