Thalapathy 69: தளபதி 69ல் அதிரடி மாற்றம்... மீண்டும் பழைய கூட்டணியில் விஜய்..?

விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 கூட்டணியில் அதிரடியாக சில மாற்றங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 10, 2024 - 17:55
0 327
Thalapathy 69: தளபதி 69ல் அதிரடி மாற்றம்... மீண்டும் பழைய கூட்டணியில் விஜய்..?

சென்னை: விஜய்யின் கோட் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனையடுத்து விஜய் தனது கடைசிப் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி தளபதி 69 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படம் அரசியல் பின்னணியில் பக்கா கமர்சியலாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி இன்னும் அபிஸியலாக அறிவிக்கவில்லை என்றாலும், விரைவில் விஜய் – ஹெச் வினோத் கூட்டணி உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது.  

கமலின் 233வது படத்தை இயக்கவிருந்த வினோத், அதிலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. கமலின் கால்ஷீட் பிரச்சினையால் இந்தப் படம் ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்காக எழுதிய அரசியல் கதையை விஜய்யிடம் கூறியுள்ளார் வினோத். இதற்கு விஜய் சம்மதம் தெரிவிக்க தற்போது தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் ஹெச் வினோத் தான் முதலிடத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்தப் படத்தை DVV Entertainment நிறுவனம் தயாரிக்கவிருந்தது.  

தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ள DVV Entertainment, தளபதி 69 மூலம் கோலிவுட்டிலும் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதோடு இல்லாமல் இந்தப் படத்துக்காக விஜய்க்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கவும் ரெடியாக இருந்தது. இந்த நிலையில், தளபதி 69 ப்ராஜெக்ட்டில் இருந்து DVV Entertainment விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்நிறுவனத்திற்குப் பதிலாக 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ், சன் பிக்சர்ஸ் அல்லது ஏஜிஎஸ் தளபதி 69 படத்தை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User