Thalapathy 69: கமல் ரோலில் விஜய்… Rise To Rule… தளபதிக்காக H வினோத் கொடுத்த சர்ப்ரைஸ்!

விஜய்யின் தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 02, 2024 - 12:33
Updated: 2 years ago
0 244
Thalapathy 69: கமல் ரோலில் விஜய்… Rise To Rule… தளபதிக்காக H வினோத் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை: தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 இயக்குநர் பற்றிய எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தான் தளபதி 69 இயக்குநர் என தகவல் வெளியானது. ஆனால் அவரோ சூர்யாவுடன் கமிட்டாகிவிட்டார்.  

அதேபோல், வெற்றிமாறன், அட்லீ, ஷங்கர், நெல்சன், லோகேஷ், டோலிவுட் முன்னணி இயக்குநர்கள் இருவர் என பலரது பெயர்கள் லிஸ்ட்டில் இருந்தன. ஆனால் தற்போதைய நிலவரப்படி ஹெச் வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சதுரங்க வேட்டை மூலம் இயக்குநராக என்ட்ரியான வினோத், தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.  

இதனால் கமலின் 233வது படத்தின் இயக்குநராக ப்ரொமோஷன் கிடைத்தது. கடந்தாண்டு கமல் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் அபிஸியல் அப்டேட்டை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டது. Rise To Rule என்ற டேக் லைன் மூலம் KH 233 பக்கா பொலிட்டிக்கல் ஜானர் மூவி என்பதும் கன்ஃபார்ம் ஆனது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் ஷூட்டிங் செல்லும் முன்பே ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது.  

இதனையடுத்து இதே கதையை கொஞ்சம் மாற்றிய ஹெச் வினோத், அதனை விஜய்யிடம் கூறியுள்ளாராம். விரைவில் விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் ஹெச் வினோத் சொன்ன கதை அவரை இம்ப்ரஸ் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஹெச் வினோத்தும் தனது அடுத்தப் படம் அரசியல் பின்னணியில் தான் இருக்கும் எனக் கூறியுள்ளார். இதனால் விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User