Thalaivar 171: முதலில் விஜய்… இப்போ ரஜினி… தலைவர் 171 வில்லன் ரேஸில் 80ஸ் பிரபலம்!

ரஜினியின் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தில் வில்லன் கேரக்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Apr 09, 2024 - 10:51
0 293
Thalaivar 171: முதலில் விஜய்… இப்போ ரஜினி… தலைவர் 171 வில்லன் ரேஸில் 80ஸ் பிரபலம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 171 என்ற டைட்டிலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பு தலைவர் 171 டைட்டில் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே தலைவர் 171 படம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

இந்தப் படத்தில் ரஜினியின் கேரக்டர் நெகட்டிங் ஷேடில் இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதாவது ரஜினி ஆன்டி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். அதேநேரம் லோகேஷின் வழக்கமான ஸ்டைல் இந்தப் படத்தில் இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல், கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தல் போன்றவை இப்படத்தில் கிடையாது என லோகேஷ் தெளிவாக கூறிவிட்டார். இதனால் தலைவர் 171 படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  

தலைவர் 171 படத்தின் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் வில்லனாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் படி, இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மைக் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். 80களில் வெள்ளிவிழா நாயகனாக தமிழ் சினிமாவை கலங்கடித்தவர் மைக் மோகன். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ரஜினி ஜோடியாக ஷோபனா நடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையா இல்லையா என்பது 22ம் தேதி வெளியாகும் டீசரில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 171 டைட்டில் டீசரை பார்த்துவிட்டதாகவும், அது செம்ம மிரட்டலாக வந்துள்ளது என்றும் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User