பவானிசாகரில் பயங்கர விபத்து.. கார்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலியான சோகம் !

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

May 01, 2024 - 12:03
0 419
பவானிசாகரில் பயங்கர விபத்து.. கார்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலியான சோகம் !

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் சொகுசு கார் ஒன்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் எதிரே கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி ரஞ்சிதா, 8 வயது மகன் அபிஷேக், 7 வயது மகள் நித்திஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதேவேளையில் பவானிசாகரில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு காரை ஒட்டி வந்த அக்சரா மோகன், சுஜித், விஷால் பத்ரி ஆகிய மூவருக்கு லோசான காயங்கள் ஏற்பட்டது. 

தகவலறிந்து வந்த பவானிசாகர் போலீசார்,  உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார் , சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User