மாணவச் செல்வங்களே.. தன்னம்பிக்கையுடன் முயன்று வெற்றி பெறுங்கள்.. விரைவில் சந்திப்போம்!.. வாழ்த்திய விஜய்

சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். தேர்வில் வெற்றி பெறாதவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள் விரைவில் நாம் சந்திப்போம் என்று கூறியுள்ளார் விஜய்.

May 10, 2024 - 13:06
0 344
மாணவச் செல்வங்களே.. தன்னம்பிக்கையுடன் முயன்று வெற்றி பெறுங்கள்.. விரைவில் சந்திப்போம்!.. வாழ்த்திய விஜய்

நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என கடந்த சில ஆண்டு காலமாகவே சேவை செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கினார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். அனைவருக்கும் விருந்தளித்தார் விஜய். அப்போது அனைவரும் விஜய்க்கு நன்றி கூறியதோடு அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். 

மாணவர்கள், இளைய தலைமுறையினர், விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்தது போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் விஜய். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார் விஜய். GOAT திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு விரைவில் அரசியலில் களமிறங்குவார் விஜய். 

இன்றைய தினம் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார் விஜய். அவர் தனது பதிவில்,  10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் மற்றவர்கள் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.  

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்! என்று பதிவிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User