Raayan: ராயன் இசை வெளியீட்டு விழா... தனுஷ் ரசிகர்களுக்கு ஏஆர் ரஹ்மானின் மியூசிக் ட்ரீட் ரெடி!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Jul 04, 2024 - 18:07
0 510
Raayan: ராயன் இசை வெளியீட்டு விழா... தனுஷ் ரசிகர்களுக்கு ஏஆர் ரஹ்மானின் மியூசிக் ட்ரீட் ரெடி!
ராயன் இசை வெளியீட்டு விழா

சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன், இந்த மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே ராயன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில் தனுஷ் மட்டும் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இதனால் ஏமாற்றத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ராயன் ஆடியோ லான்ச் நாளை மறுநாள் (ஜூலை 6) சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதேபோல், ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ராயன் ஆடியோ லான்ச் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிறப்பு விருந்தினர்களாக தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வரும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா, சூப்பர் ஹிட் அடித்ததுடன் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. இதனால் தனுஷின் 50வது படமான ராயனும் ஹிட் அடிக்குமா என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தனுஷ் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான கேப்டன் மில்லர், லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் அயலக மொழி பிரிவில் விருது வென்று அசத்தியுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனம் பெற்றிருந்தாலும், இப்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ராயன் ரிலீஸ் நேரத்தில் கேப்டன் மில்லருக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளதால் தனுஷ் & டீம் உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User