Suchi Leaks: “அவனுக்கு தனுஷ் கூட ரூம்ல என்ன வேலை..” கோலிவுட்டை அதிர வைத்த சுச்சி லீக்ஸ்!

பின்னணிப் பாடகி சுசித்ரா, அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ் இருவருக்கும் இடையேயான உறவு பகிரங்கமாக பேசியது வைரலாகி வருகிறது.

May 14, 2024 - 17:23
0 1.6
Suchi Leaks: “அவனுக்கு தனுஷ் கூட ரூம்ல என்ன வேலை..” கோலிவுட்டை அதிர வைத்த சுச்சி லீக்ஸ்!

சென்னை: ரேடியோ ஜாக்கி, சிங்கர் என வெரைட்டி காட்டியவர் சுசித்ரா. நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட அவர், பின்னர் அவரை பிரிந்துவிட்டார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் என்ற சம்பவம் திரையுலக பிரபலங்களை மிரள வைத்தது. குறிப்பாக தனுஷ், அமலா பால், த்ரிஷா, ஆண்ட்ரியா, கார்த்திக் குமார் உள்ளிட்ட சில நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றிய தகவல்கள் வைரலாகின. இதற்கு சுசித்ரா தான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. 

அதன்பின்னர் சுசித்ரா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் குமுதம் யூடியூப் சேனலுக்கு சுசித்ரா கொடுத்துள்ள பேட்டி, மீண்டும் கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி, பயில்வான் ரங்கநாதன், ஆண்ட்ரியா, த்ரிஷா என பலரையும் வெளுத்து வாங்கியுள்ளார். முக்கியமாக தனுஷ் – கார்த்திக் குமார் பற்றி சுசித்ரா பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

அதில், கார்த்திக் குமார் அடிக்கடி தனுஷ் வீட்டிற்கு செல்வார் என்றும், அங்கு போய்விட்டால் அதிகாலை 3 மணிக்கு தான் வருவார் எனவும் கூறியுள்ளார். அதேபோல், கார்த்திக் குமாரும் தனுஷும் ஒரே ரூமில் ஒன்றாக கூத்தடிப்பார்கள், இருவரும் Gay என வெளிப்படையாகவே போட்டுடைத்துள்ளார். இந்த குழுவில் ஆண்ட்ரியா உட்பட மேலும் சில பிரபலங்கள் இருப்பதாகவும், இவர்கள் அனைவரும் இரவு நேரத்தில் பார்ட்டி என செம்ம அட்ராசிட்டி அடிப்பதாகவும் கூறியுள்ளார். 

அதுமட்டும் இல்லாமல் இந்த டீமில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பிராங்க் செய்து விளையாடுவதாகவும், அப்படித்தான் அவர்கள் சேர்ந்து எனது கேரியரையே காலி செய்துவிட்டதாகவும் பேசியுள்ளார். அதேபோல் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்தனர். ஐஸ்வர்யா நல்ல அம்மாவாக கூட இருந்தது கிடையாது என சுசித்ரா பற்ற வைத்துள்ள நெருப்பு கொளுந்துவிட்டு எரிகிறது. இன்னொரு பக்கம் பயில்வான் ரங்கநாதன் பிட்டு பட நடிகைகளின் எஜென்ட் எனவும் கூறியுள்ளார். சுசித்ராவின் இந்த பேட்டி திரையுலகையே அதிர வைத்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User