Star Trailer: “இந்த மூஞ்சிய வச்சிட்டு எப்படி நடிப்ப..?” வெளியானது கவினின் ஸ்டார் ட்ரெய்லர்!

கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Apr 27, 2024 - 13:51
0 298
Star Trailer: “இந்த மூஞ்சிய வச்சிட்டு எப்படி நடிப்ப..?” வெளியானது கவினின் ஸ்டார் ட்ரெய்லர்!

சென்னை: கோலிவுட்டில் வளரும் ஹீரோவாக மாஸ் காட்டி வரும் கவின், தற்போது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். பியார் பிரேமா காதல் மூவி மூலம் கவனம் ஈர்த்த இளன் ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார். கவின், இளன், யுவன் என செம்ம ஃபேண்டஸியான காம்போவில் உருவாகியுள்ள ஸ்டார் படத்துக்கு 2கே கிட்ஸ் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருந்த இப்படத்தில் கவின் கமிட்டானதுமே ஸ்டார் வேல்யூ கூடியது. அந்தளவிற்கு கவினுக்கு ரசிகர்களிடம் பெரிய ரீச் கிடைத்துள்ளது. 

நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியான ஸ்டார், அதன்பின்னர் தியேட்டரில் ரிலீஸான டாடா படங்கள் கவின் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதனால் தற்போது கவின் நடித்துள்ள ஸ்டார் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் ஸ்டார் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சினிமாவில் ஹீரோவாகும் கனவுடன் மும்பை செல்லும் கவின், அங்கு சந்திக்கும் போராட்டங்கள் தான் ஸ்டார் படத்தின் கதை எனத் தெரிகிறது. இதே ஜானரில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், ஸ்டார் மூவி வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஸ்டார் ட்ரெய்லரில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல், எமோஷனல், சென்டிமெண்ட் என அனைத்திலும் கவின் செம்மையாக ஸ்கோர் செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் ஸ்டார் திரைப்படம் கவினுக்கு ஹாட்ரிக் ஹிட் மூவியாக அமையும் என சொல்லப்படுகிறது. ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஸ்டார், மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User