Star OTT Release: ஓடிடியில் வெளியான ஸ்டார்... கவினை கொண்டாடும் ரசிகர்கள்!

கவின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ஸ்டார் திரைப்படம், தற்போது ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

Jun 07, 2024 - 10:53
0 399
Star OTT Release: ஓடிடியில் வெளியான ஸ்டார்... கவினை கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: கோலிவுட்டின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் கவின். ஜூனியர் ஆர்ட்டிஸ், சீரியல் நடிகர், பிக் பாஸ் என ரவுண்டு அடித்து வந்த கவினுக்கு, டாடா மூவி சூப்பரான கம்பேக் கொடுத்தது. டாடா படத்தின் வெற்றிக்குப் பின்னர், கவினுக்கு அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இளன் இயக்கிய ஸ்டார் படத்தில் நடித்தார் கவின். இந்தப் படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கவிருந்தார். அவரது போஸ்டர்கள் கூட வெளியாகியிருந்தது. அதன்பின் ஸ்டார் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

ஆனால், டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கவினுடன் லால், ஆதித்தி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக ஸ்டார் ட்ரெய்லர் வெளியாகி படத்துக்கு மிகப் பெரிய ஹைப் கொடுத்திருந்தது. இதனால் டாடா படத்தை விடவும், ஸ்டார் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ரிலீஸான ஸ்டார், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஸ்டார் படத்தில் கவினின் நடிப்பு மட்டுமே ரசிக்கும்படியாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். 

கதை, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், கவினுக்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜா தனது பின்னணி இசையில் செம்மையாக ஸ்கோர் செய்திருந்தார். ஒட்டுமொத்தமாக 12 கோடி பட்ஜெட்டில் உருவான ஸ்டார், பாக்ஸ் ஆபிஸில் 20 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவினின் டாடா 50 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்டார் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

அதன்படி, அமேசான் ப்ரைம் தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது ஸ்டார். திரையரங்குகளில் வெளியான போது ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதனால் அப்போது ரசிகர்கள் பலரும் தியேட்டர் செல்வதை தவிர்த்துவிட்டனர். அந்த குறையை போக்க இப்போது அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்டார் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். தியேட்டர் ரிலீஸின் போது கவின் நடிப்புக்கு எப்படி வரவேற்பு கிடைத்ததோ, அதேபோல் ஓடிடி ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். ஸ்டார் திரைப்படம் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், ஓடிடியில் கவினுக்கு மிகப் பெரிய ரீச் கிடைத்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User