மாமனாரை சுட்ட மருமகன் கைது-போலீசார் விசாரணை

வெள்ளையனுக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்

Jan 05, 2024 - 22:50
0 168
மாமனாரை சுட்ட மருமகன் கைது-போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன்.60 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 ஏக்கர் நிலத்தை அடமானமாக வைத்து, 15 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். 

சேலம் மாவட்டம்,வாழப்பாடி பகுதி திருமனூர் பக்கமுள்ள ஜம்புத்து மலையை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் விவசாயி. வெள்ளையனின் மருமகனான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமான நிலத்தை மீட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த சில மாதமாகவே வெள்ளையன், மருமகன் சௌந்தர்ராஜனிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அடிவாரப்பகுதியில் குத்தகை நிலத்தில் அரளித் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செளந்தர்ராஜன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதில் வெள்ளையனுக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.குடும்ப தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக நாமகிரிப்பேட்டை போலீசார் முதல்கட்ட தகவல் தெரிவித்த நிலையில் தலைமறைவான சௌந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர். குண்டடிபட்ட வெள்ளையன் ஏற்கனவே சாராய வழக்கு ஒன்றில் குண்டாசில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User