நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. 

May 15, 2026 - 05:06
0 380
நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு 
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு 

நாட்டின் பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றினால் ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதன் காரணமாக நேற்றைய முன்தினம்  காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 30,000-ம் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து, ரூ. 1,20,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு  ரூ. 400 உயர்ந்து, ரூ. 120,400 -க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம்  சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 800 குறைந்து சவரன் ரூ. 1,19,600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம்  ரூ. 14,950 -க்கு செய்யப்படுகிறது.  அதே போன்று  வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 305 -க்கும், ஒரு கிலோ ரூ. 3,05,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User