Sivakarthikeyan: “ஐ லவ் யூ சார்” சிவகார்த்திகேயனிடம் சிக்கிய அனிமல் இயக்குநர்.. நெட்டிசன்ஸ் Reaction

இந்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், சில நெகட்டிவான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் அனிமல் இயக்குநர் சந்தீப் வாங்க ரெட்டி குறித்து சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது.

Mar 06, 2024 - 11:47
0 197
Sivakarthikeyan: “ஐ லவ் யூ சார்” சிவகார்த்திகேயனிடம் சிக்கிய அனிமல் இயக்குநர்.. நெட்டிசன்ஸ் Reaction

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் அனிமல். இந்தியில் உருவான அனிமல் பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிய அனிமல், பல நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தன. ஆல்ஃபா என்ற ஆணாதிக்கத்தை பின்னணியாக வைத்து அதீத வன்முறைகளுடன் உருவாகியிருந்தது அனிமல். மேக்கிங் தவிர்த்து படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள், வசனங்கள் சர்ச்சையாகின. 

நடிகை ராதிகா, பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட சில கோலிவுட் பிரபலங்களும் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதனிடையே இந்தப் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்ததும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அனிமல் இரண்டாம் பாகம் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் சந்தீப் ரெட்டி வாங்கா.

இந்நிலையில், அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனும் சந்தீப் ரெட்டி வாங்காவும் பங்கேற்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், அனிமல் படம் பார்த்தேன், அது தனக்கு பிடித்திருந்ததாகக் கூறினார். அதேபோல் இந்தப் படத்தின் பின்னணி இசை நன்றாக இருந்ததாகவும், மேக்கிங் பார்த்து வியந்தேன் என்றும் மனம் திறந்தார்.

முக்கியமாக அனிமல் படத்தை விட சந்தீப் ரெட்டி வாங்காவின் பேட்டிகள் பயங்கரமா இருந்ததாகவும், அவர் வெளிப்படையாக பேசுவது பிடித்துள்ளது என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வருகின்றனர். சந்தீப் ரெட்டி வாங்கா அனிமல் மாதிரி தனக்கும்  ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறாரா… பலரும் நெகட்டிவாக விமர்சித்த ஒரு படத்தை இப்படி பாராட்டலாமா எனவும் கலாய்த்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User