Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி கொடுத்த சிவகார்த்திகேயன்… அடேங்கப்பா இத்தனை லட்சமா?

நடிகர் சங்கக் கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.

Apr 23, 2024 - 17:06
0 349
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி கொடுத்த சிவகார்த்திகேயன்… அடேங்கப்பா இத்தனை லட்சமா?

சென்னை: கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் SK 23ல் நடித்து வருகிறார். முன்னதாக சொந்த படங்கள் தயாரித்து சிவகார்த்திகேயனுக்கு பல கோடிகள் கடன் இருப்பதாக சொல்லப்பட்டன. ஆனால் அதனையெல்லாம் சுத்தமாக கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன் மினிமம் பட்ஜெட் படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவையனைத்தும் வித்தியாசமான கதை களங்களில் உருவாகி வருகின்றன.   

இந்நிலையில், நடிகர் சங்க கட்டட பணிகளுக்காகவும் மிகப் பெரிய தொகையை நிதியாக கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன், புதிய கட்டட பணிகளுக்காக தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.50 லட்சம் நிதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.        

50 லட்சம் நிதிக்கான காசோலையை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், தளபதி விஜய், உதயநிதி ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் நிதி கொடுத்திருந்தனர். அவர்களது வரிசையில் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர் சங்க கட்டட பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கின. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர் சங்க கட்டட பணிகள் தொடங்கிய மறுநாளே சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User