இந்திய டி20 கேப்டன் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்: வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம் 

டி 20 கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியில் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். 

Jun 06, 2026 - 09:06
0 336
இந்திய டி20 கேப்டன் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்: வைபவ் சூர்யவன்ஷி  அணியில் இடம் 
இந்திய டி20 புதிய அணி

சூர்யகுமார்  ஃபார்ம் மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில், ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஆசிய போட்டிகளுக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் அசத்தி இருந்தார். அவரை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த டி20 அணியில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணி விபரம் வருமாறு:  ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஸ்னோய், அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரீத் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்‌ஷர் படேல், ஹர்சித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ்ச் சூர்யவன்ஷி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User