நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் : தங்கம் சவரன் ரூ 1 லட்சத்தை தாண்டியது  

வாரத்தின் முதல் நாளான இன்று மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 1 லட்சத்தை தாண்டியுள்ளது தங்கம் கிராம் 13,038 ரூபாய் விற்பனை ஆகிறது. 

Dec 22, 2025 - 10:04
0 261
நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் : தங்கம் சவரன் ரூ 1 லட்சத்தை தாண்டியது  
Shocking news for jewelers

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து, வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்து வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை (டிசம்பர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளிரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.

இந்தநிலையில், மாலையில் தங்கம் சவரன்  720 ரூபாய் உயர்ந்து, சவரன் 1 லட்சத்து 560 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. காலை கிராம் 80 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்துள்ளது.

வார தொடக்க நாளான இன்று காலை மற்றும் மாலை என இரு முறை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு இருப்பது. முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User