வாரத்தின் கடைசி நாளில் ஷாக் நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு

நேற்றைய தினம் காலை, மாலை என இருவேளையும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது. ஆனால் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை சற்றே உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

May 02, 2026 - 04:19
0 354
வாரத்தின் கடைசி நாளில் ஷாக் நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு
தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14.050-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கத்தின் விலை நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்தது.

வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி அதை விலையில் விற்பனை செய்யப்பட்ட்து.

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User