2,11,20,29 தேதிகளில் பிறந்த நீங்கள் எப்படி?

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள். அவர்கள் குணநலன், ராசிபலன் ஆகியவற்றை பார்ப்போம். 

May 02, 2026 - 04:32
0 480
2,11,20,29 தேதிகளில் பிறந்த நீங்கள் எப்படி?
,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள்

2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் சந்திரன். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும்.

2க்கு உரிய சந்திரனும் 1க்கு உரிய சூரியனும் உடல் எண், உயிர் எண் என்று அமையும் பட்சத்தில் ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண் 4 பெயர் எண்ணாக அமைந்தால் அது கிரகத்திற்கு ஒப்பாகும். எனவே 1, 2, 4 காம்பினேஷன் நல்லதல்ல என்று எண் கணிதம் கூறுகின்றது. இது போன்ற அமைப்பு ஒருவரை மிகுந்த சங்கடங்களுக்கு உள்ளாக்கும். எல்லா நிலைகளிலும் போராடியே தீரவேண்டும். படிக்கும் காலத்தில் எதிர்பார்க்கின்ற மதிப்பெண்கள் பெறுவதில் துவங்கி, தொழில் ஸ்தானத்தில் பதவி உயர்வு பெறுவது வரை எல்லாமே போராட்ட வாழ்க்கையாக இருக்கும். ஆனால் எதிர்பாராத சில அதிசயங்களும் காண்பார்கள்.

நல்ல மனைவி அமைவாள். இறைவனின் அருள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிக மகிழ்ச்சியுள்ளதாக அமையும். குழந்தைகள் சாதித்துக் காட்டுபவர்களாக இருப்பார்கள். வீடு, வாசல் அமையும். சொந்த பந்தங்கள் நடுவில் நல்ல பெயர் இருக்கும்.இது என்ன விதமான பலன்கள் என்று வியப்பாக இருக்கும். தனிமனிதனாக சோதனைகளை சந்தித்தவர், குடும்பம் என்று ஆன பின்னர் சுகங்களைச் சந்திப்பார் என்பதைத் தான் இந்த பலன்கள் கூறுகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User