வார தொடக்கத்தில் அதிர்ச்சி: தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.1,760 உயர்வு 

வார தொடக்க நாளான இன்று தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.1,760 தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. 

Jan 12, 2026 - 04:20
0 256
வார தொடக்கத்தில் அதிர்ச்சி: தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.1,760 உயர்வு 
தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்

இந்நிலையில், வார கடைசி நாளான சனிக்கிழமை சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ 1,03,200 ஆக விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ 100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கு விற்பனை ஆனது. 

அதே போன்று வெள்ளியும் கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு ரூ. 7 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,75,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. வார தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,960-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து  ஒரு கிராம் ரூ.13,120-க்கு விற்பனை ஆகிறது. 

இதே போன்று வெள்ளியும் கிலோவிற்கு 12 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.2,87,000 விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User