செந்தில் பாலாஜிக்கு ஜாமீனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு

ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Jan 08, 2024 - 17:47
Updated: 3 years ago
0 212
செந்தில் பாலாஜிக்கு ஜாமீனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய முடியாத அமலாக்கத்துறை எதற்காக வழக்கு  தொடர்கிறீர்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் நீதிபதி கேள்வி எழுப்பினார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம்  தேதி கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த்து. 

இதனையடுத்து, ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் கீழமை நீதிமன்ற நாடலாம் எனவும் அந்த மனு மீது  தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (ஜனவரி 08) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாகத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது கோபமடைந்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதிமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள் என்று அமலாகத்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க கூடாது, ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நாளை (ஜனவரி 09) நீதிபதி ஒத்திவைத்தார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User