Rewind: “டைரக்ஷனை ஒரு கை பார்ப்பேன்''- நடிகை ஷாலினி (பாகம் 2)

திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி கொடுத்த முதல் பேட்டி 17.05.2001 அன்று குமுதம் இதழிலில் வெளிவந்தது.

Feb 17, 2026 - 12:31
0 262
Rewind: “டைரக்ஷனை ஒரு கை பார்ப்பேன்''- நடிகை ஷாலினி (பாகம் 2)
Rewind

Rewind: “டைரக்ஷனை ஒரு கை பார்ப்பேன்''

- நடிகை ஷாலினி (பாகம் 2)


குடும்பத்துல இன்னும் ரெண்டு நட்சத்திரங்கள் இருக்காங்க, ரிச்சர்ட் அப்புறம் தங்கை ஷாம்லி?

"அண்ணன் ரிச்சர்ட் இப்ப நடிக்க வந்திருக்கறது சரியான ஒரு படத்துலதான்னு நினைக்கிறேன். டைரக்டர் கதிர், ஏ.ஆர். ரஹ்மான்னு ஒரு நல்ல காம்பினேஷன் கிடைச்சிருக்கு. கண்டிப்பா ஒரு நல்ல பிரேக் ரிச்சர்டுக்குக் கிடைக்கும்.

ஷாம்லி இப்ப நைன்த் படிக்கிறா. பதினாலு வயசுதான் ஆகுது. நடிக்கிற ஐடியா இருக்கான்னு கேட்டா, 'நோ சான்ஸே இல்லை'ங்கிறா. எங்க வீட்டுல எப்பிடின்னா, எதுலயுமே எங்க சுதந்தரத்துக்கு விட்டுருவாங்க. ஆரம்பத்துல படத்துல நடிக்க எனக்கு ஆர்வம் இல்லாதப்போ, வேண்டாம்னு விட்டுட்டாங்க. ஃபாசில் அங்கிள் கேட்டப்ப நான் ஒகே சொன்னேன். அதேமாதிரி 'காதலுக்கு மரியாதை முடிச்சபிறகு ஒரு வருஷம் படம் பண்ணாமலே இருந்தேன். அப்பவும் உன் இஷ்டம்னு அப்பா விட்டுட்டாரு. இதே சுதந்தரம்தான் ஷாம்லிக்கும்..."

நீங்க ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறதா பேசிக்கிறாங்களே?

அவர்கூட நான் ரெகுலரா ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கறதால யாரோ கிளப்பிவிட்டிருக்காங்க. ஆக்சுவலா ஃபாசில் சார்கிட்ட 'சுந்தர கில்லாடி'ங்கிற மலையாளப் படத்துல கொஞ்சநாள் டைரக் ஷன் கத்துக்கிட்டேன். சும்மா அது ஒரு பப்பி இன்ட்ரஸ்ட் மாதிரி. மத்தபடி சீரியஸா டைரக்ஷன் ஆசையெல்லாம் எனக்கு இல்ல. பாக்கலாம்... எதிர்காலத்துல நான் அப்படித்தான் ஆகணும்னு இருந்தா அதையும் ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User