Rathnam Review: விஷாலின் ஆக்‌ஷன் ட்ரீட்… ஹரியின் கமர்சியல் ஹிட்… ரத்னம் டிவிட்டர் விமர்சனம் இதோ!

விஷால் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

Apr 26, 2024 - 15:29
Updated: 2 years ago
0 487
Rathnam Review: விஷாலின் ஆக்‌ஷன் ட்ரீட்… ஹரியின் கமர்சியல் ஹிட்… ரத்னம் டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: மார்க் ஆண்டனி மூலம் கம்பேக் கொடுத்த விஷால், அடுத்து ரத்னம் படத்திற்காக ஹரி கூட்டணியில் இணைந்தார். தாமிரபரணி, பூஜை வெற்றிக் கூட்டணியான விஷால் – ஹரி காம்போ, ரத்னம் படத்திலும் மாஸ் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி இன்று வெளியான ரத்னம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. விஷாலுடன் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

ரத்னம் படத்திலும் ஹரி தனது வழக்கமான கமர்சியல் மேஜிக் மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி சோஷியல் மீடியா ட்ராக்கர்கள், நெட்டிசன்கள் கொடுத்துள்ள டிவிட்டர் விமர்சனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ”ரத்னம் ஹரி ஸ்டைலில் உருவாகியுள்ள பக்கா ஆக்‌ஷன் கமர்சியல் மூவி. நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றாது… கமர்சியல் மூவி ரசிகர்களுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கும் ரத்னம் கண்டிப்பாக பிடிக்கும்” என அமுத பாரதி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல், ரத்னம் ஹரியின் பழைய ஃபார்முலா கதை தான். ஆக்‌ஷன் சீன்ஸ், இடைவேளை காட்சி, சில எமோஷனல் போர்ஷன்ஸ் நன்றாக வந்துள்ளது. விஷால், ப்ரியா பவானி சங்கர் இருவருக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை லேக் ஆனதாகவும், மான்டேஜ் சாங்ஸ், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்துக்கு பலம் என்றும் அவர் கூறியுள்ளார். சில இடங்களில் விஷால் – ஹரி கூட்டணியில் வெளியான பூஜை படத்தின் சாயல் இருப்பதாகவும் அமுத பாரதி கூறியுள்ளார்.

நேற்று திருச்சி, தஞ்சை ஏரியா தியேட்டர்களில் ரத்னம் படத்தை வெளியிடவிடாமல் சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அதேநேரம் ஆன்லைன் அட்வான்ஸ் புக்கிங்கும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது ரத்னம் படத்தின் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளதாக நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அதேபோல், ரத்னம் ஹரியின் டிப்பிக்கல் சினிமா எனவும், விஷால், ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத் காம்போ சூப்பர் என்றும் பாராட்டியுள்ளார்.  

சாய் சதீஷ் என்ற நெட்டிசன், ரத்னம் திரைப்படம் விஷால் – ஹரி கூட்டணியில் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். புரட்சித் தளபதி விஷால் ஒன்மேன் ஷோவாக மிரட்டியுள்ளார். ஆக்‌ஷன் சீன்ஸ் செம்ம மாஸ் என்றும், எமோஷனலான காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரத்னம் திரைக்கதையில் ஹரி மீண்டும் தனது வழக்கமான வைப் கொடுத்துள்ளதாகவும், ஆக்‌ஷன் ப்ளஸ் ஃபேமிலி ட்ராமா ஜானரில் கதை சொன்ன விதம் அருமை எனவும் பாராட்டியுள்ளார். அதேபோல், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், பிஜிஎம், ப்ரியா பவானி ஷங்கரின் ஆக்டிங் ஆகியவையும் சூப்பர் என விமர்சனம் செய்துள்ளார். 

வி2 சினிமாஸ் என்ற தளத்தில் ரத்னம் படத்துக்கு 3.25 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது. அதில், ரத்னம் ஹரியின் பக்கா ஆக்‌ஷன் ட்ரீட் எனவும், விஷாலின் ஆக்டிங் டாப் நாட்ச் என்றும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ப்ரியா பவானி சங்கரின் நடிப்பும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளதாக விமர்சனத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரத்னம் படத்துக்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், இது கமர்சியல் ஆக்‌ஷன் மூவி, விஷாலின் ஆக்டிங், ஆக்‌ஷன் பெர்ஃபாமன்ஸ் இரண்டுமே தரம். மேலும் 7 ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகவும், ப்ரியா பவானியை சுற்றியே கதை நடப்பதால் அவரது நடிப்பும் நன்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சிங்கிள் ஷாட் சீன்ஸ், எமோஷனல் சீன்ஸ் என எல்லாமே ஒர்க் அவுட் ஆகியுள்ளன. ஒட்டுமொத்தமாக பக்கா கமர்சியலாக வெளியாகியுள்ள ரத்னம் படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணாம பாருங்க என கூறியுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User