Rathnam Box Office: கம்பேக் கொடுத்த ஹரி… விஷாலின் ரத்னம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

விஷால் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Apr 27, 2024 - 10:58
Updated: 2 years ago
0 665
Rathnam Box Office: கம்பேக் கொடுத்த ஹரி… விஷாலின் ரத்னம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

சென்னை: விஷாலின் ரத்னம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தாமிரபரணி, பூஜை வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்னம் படத்தில் விஷால் – ஹரி கூட்டணி கூட்டணி இணைந்துள்ளது. ரிலீஸுக்கு ஒருநாள் முன்னர் ரத்னம் படத்தை வெளியிடவிடாமல் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம்சாட்டியிருந்தார். இந்த பஞ்சாயத்துகளை கடந்து ரத்னம் நேற்று ரிலீஸானது. 

வழக்கமாக தென் மாவட்டங்களை பின்னணியாக வைத்து படம் இயக்கும் ஹரி, இந்த முறை வேலூர் கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார். லோக்கல் எம்.எல்.ஏ, ரவுடியாக வலம் வரும் சமுத்திரகனியிடம் அடியாளாக வேலை பார்க்கும் விஷால், ஒரு சம்பவத்தில் ப்ரியா பவானி சங்கரை தனது உயிரையே பணயம் வைத்து காப்பாற்றுகிறார் விஷால். இப்படி பல முறை ரவுடிகளிடம் இருந்து ப்ரியா பவானி சங்கரை காப்பாற்றுவது தான் விஷாலின் முழு நேர வேலையாகிறது.

ப்ரியா பவானி சங்கர் மறைந்த தனது அம்மாவை போல இருப்பதால் தான் விஷால் அவரை பாதுகாக்க, பின்னர் அதுவே காதலாக மாறுகிறது. இந்த ஒன்லைன் கதையில் ஆக்‌ஷன், சென்டிமெண்ட், எமோஷனல் என ஹரி தனது வித்தைகளை மொத்தமாக எடுத்துவிட, படமும் கமர்சியல் ஹிட் அடித்துள்ளது. இதனால் ரத்னம் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, ரத்னம் திரைப்படம் தமிழ்நாட்டில் 4 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். தெலங்கானாவில் 1.75 கோடி, கேரளாவில் 12 லட்சம், கர்நாடகாவில் 45 லட்சம் என கலெக்‌ஷன் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User