ராஜ்யசபா எம்பி பதவி:  தவெகவில் ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஷ் பழனிசாமி இடையே மல்லுக்கட்டு

சிவி சண்முகம் தனது ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தவெக ராஜ்யசபா எம்பி பதவியை பிடிக்க ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஷ் பழனிசாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

Jun 01, 2026 - 07:49
0 665
ராஜ்யசபா எம்பி பதவி:  தவெகவில் ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஷ் பழனிசாமி இடையே மல்லுக்கட்டு
ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஷ் பழனிசாமி இடையே மல்லுக்கட்டு

ஜூன் 18ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள ஒரு இடம் உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்கான தேர்தல் இம்மாதம் (ஜூன்) 18ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறுகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெகவிற்கு இந்த ராஜ்ய சபா பதவி கிடைக்க உள்ளது. இந்த எம்பி பதவியை பிடிக்க தவெகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொடக்க காலம் முதலே, அவரது அரசியல் வியூகங்களை வகுப்பதிலும், மக்கள் தொடர்பு மற்றும் பிராண்டிங் பணிகளிலும் முக்கிய பங்காற்றி வருபவர் ஜெகதீஷ் பழனிசாமி ஆவார். சினிமா துறையில் விஜய்யின் மேலாளராகவும், 'தி ரூட்' (The Route) எனும் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் நிறுவனராகவும் இருப்பவர். தற்போது தவெக-வின் முக்கிய பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 

பல கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வியூக வகுப்பாளராக ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்தார். கட்சி தொடங்கியது முதல் சட்டமன்ற தேர்தல் வரை பல்வேறு வியூகங்களை ஜான் ஆரோக்கியசாமி வகுத்து கொடுத்தார். தவெக சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமான நபர்களில் ஜான் ஆரோக்கியசாமியும் ஒருவர். விஜயின் நம்பிக்கைகுரிய நபராக வலம் வருபவர் ஜான் ஆரோக்கியசாமி. 

தற்போது ராஜ்யசபா எம்பி பதவியை பிடிக்க ஜெகதீஷ் பழனிசாமி, ஜான் ஆரோக்கியசாமி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் விஜயின் நம்பிக்கைகுரியவர்களாக இருப்பதால், விஜய்  யாரை டிக் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User