Rajini: ”ஐயோ அத பத்திலாம் கேக்காதீங்க..” ஜெட் வேகத்தில் காரில் பறந்த ரஜினி… ரசிகர்கள் அப்செட்!

வேட்டையன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினி தற்போது சென்னை திரும்பினார்.

Mar 14, 2024 - 17:47
Updated: 2 years ago
0 292
Rajini: ”ஐயோ அத பத்திலாம் கேக்காதீங்க..” ஜெட் வேகத்தில் காரில் பறந்த ரஜினி… ரசிகர்கள் அப்செட்!

தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது நெட்டிசன்களுக்கு கன்டென்ட் கொடுத்தது. அதோடு நிறுத்திருந்தால் பரவாயில்லை, ஆனால் சங்கி கெட்டவார்த்தை இல்லையென ரஜினி விளக்கம் கொடுக்க இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. 

அதேபோல், ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வந்தார் ரஜினி. இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்று வந்த ரஜினியிடம் தமிழக அரசியல் நிலவரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியோ “அரசியல் பத்திலாம் கேக்காதீங்க… அதுக்கெல்லாம் இனி பதில் கிடையாது..” என சொல்லிவிட்டு ஜெட் வேகத்தில் கிளம்பிச் சென்றார்.      

முன்னதாக வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக போய் கொண்டிருக்கிறது என ரஜினி கூறியிருந்தார். தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்றும், ஆகஸ்ட் அல்லது அதன் பின்னர் வேட்டையன் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User