IPL தொடரை MISS பண்ணப் போகும் வீரர்கள் இவர்கள் தான்..!

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உட்பட 5 முக்கிய வீரர்கள் மிஸ் பண்ணப்போறாங்க.

Mar 14, 2024 - 17:10
0 315
IPL தொடரை MISS பண்ணப் போகும் வீரர்கள் இவர்கள் தான்..!


2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உட்பட 5 முக்கிய வீரர்கள் மிஸ் பண்ணப்போறாங்க.

17 வது ஐபிஎல் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் இருக்க, சில சோகமான செய்தியும் உள்ளது. 

அது என்னன்னா காயம் மற்றும் சொந்த காரணங்களால் முக்கிய வீரர்கள் 5 பேர் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்திய வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான முகமது ஷமிக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதோபோல், சென்னை அணி வீரர் டேவோன் கான்வாய் வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அவரை  6 வாரக் காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது சென்னை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல், ராஜஸ்தான் அணிக்கு விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, லக்னோ அணிக்காக விளையாடி வரும் மார்க் உட், கொல்கத்தா அணியின் ஜெசன் ராய் உள்ளிட்டோரும் சொந்த காரணங்களால் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User