முட்டை வாங்க போன கேப்பில் மர்டர்! ரவுடிக்கு நேர்ந்த கதி... ஆர்.கே.நகரில் அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Apr 27, 2024 - 16:20
0 394
முட்டை வாங்க போன கேப்பில் மர்டர்! ரவுடிக்கு நேர்ந்த கதி... ஆர்.கே.நகரில் அதிர்ச்சி சம்பவம்

முட்டை வாங்குவதற்காக வெளியில் சென்ற கொஞ்ச நேரத்தில் இப்படிச் சாய்த்துவிட்டார்களே என்று இந்தப் பெண் கதறுவதற்குக் காரணம், முன்விரோதத்தால் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சோகம்தான்.. அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம்...

கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள, காவல்துறையினரின் சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிதான், சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்த லொட்டை என்கிற ஆனந்த். சிறைக்கு போவதும் வருவதுமாய் இருந்த இவரது வாழ்க்கை, முன்விரோதம் காரணமாக முடிந்துவிட்டது.

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வந்துள்ளார் லொட்டை. இவர் வழக்கம்போல் வீட்டில் தன் மனைவியிடம் இரவு சாப்பாட்டிற்கு முட்டை தோசை கேட்டுள்ளார். இதையடுத்து, முட்டை வாங்கச் சென்றிருக்கிறார் அவரது மனைவி. வீட்டில் லொட்டை தனியாக இருந்த நேரம் உள்ளே புகுந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த அரிவாளால் அவரை வெட்டிச் சாய்த்துள்ளனர். 

தலை, விலா எலும்பு, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்ட லொட்டை, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே லொட்டை உயிரிழந்தார். 

இது குறித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். அண்மையில்தான் காசிமேடு பகுதியில் பட்டப் பகலில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், இந்தச் சம்பவத்தாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User