Pushpa 2: “புஷ்பராஜ் ட்ரீட் ஆரம்பம்..” டீசர் அப்டேட் கொடுத்த புஷ்பா 2 டீம்… ரசிகர்கள் வெயிட்டிங்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கும் புஷ்பா 2ம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது.

Apr 02, 2024 - 17:05
0 268
Pushpa 2: “புஷ்பராஜ் ட்ரீட் ஆரம்பம்..” டீசர் அப்டேட் கொடுத்த புஷ்பா 2 டீம்… ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த இந்தப் படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆக்‌ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் மூவியாக உருவான புஷ்பா, மேக்கிங் உட்பட அனைத்திலும் செம்ம மாஸ் காட்டியது.  

அல்லு அர்ஜுன் கேரியரில் அமர்க்களமான ஹிட் கொடுத்த புஷ்பா, டோலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா அளவிலும் கலங்கடித்தது. செம்மர கடத்தலை பின்னணியாகக் கொண்டு புஷ்பா படத்தை இயக்கியிருந்தார் சுகுமார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக புஷ்பா 2 தி ரூல் தற்போது உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் – ஃபஹத் பாசில் இடையேயான போர்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி வருகிறார் சுகுமார். 

முதல் பாகத்தை விடவும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2 ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி புஷ்பா 2 டீசர் வரும் 8ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள புஷ்பா 2 டீசர் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User