டும்.. டும்.. டும்.. எப்போ? ..KPY பாலா கொடுத்த சர்ப்ரைஸ்...!

Mar 09, 2024 - 21:59
0 254
டும்.. டும்.. டும்.. எப்போ? ..KPY பாலா கொடுத்த சர்ப்ரைஸ்...!

பிரபல தொலைக்காட்சி நடிகர் பாலாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பங்களை நடத்தி வருவதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார். அவ்வப்போது தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ்களை வழங்கி வரும் பாலா, கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு அந்த வருமானத்தை பொதுநலனுக்காக உபயோகிப்பது வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில், தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற பாலா, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மாணவ மாணவிகளுடன் திரை இசை பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டாடிய பாலா, பல்வேறு நடிகர்களின் குரல்களில் பேசி அசத்தினார். 

இதனைத் தொடர்ந்து பேசிய பாலா, தனக்கு அடுத்த மாதம் காதல் திருமணம் நடைபெற உள்ளதாக கூறினார். இதனை கேட்ட மாணவ, மாணவிகள் பலத்த கரகோஷமிட வெட்கத்தில் புன்னகைத்தார் பாலா.

நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, பாண்டிச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உச்சகட்ட தவறு என்றும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற இரக்கமற்ற ஆட்களால் தான் இதுமாதிரியான சம்பவங்கள் அரங்கேறுகின்றன என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User