போதைப் பொருள் வழக்கில் எத்தனை காலம் தான் அமைதியாக இருப்பீர்கள்? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி...

Mar 09, 2024 - 21:49
0 188
போதைப் பொருள் வழக்கில் எத்தனை காலம் தான் அமைதியாக இருப்பீர்கள்? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி...

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது குறித்து என்சிபி அதிகாரி விளக்கம் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசாதது ஏன் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாபர் சாதிக் போதைப் பொருளில் ஈட்டிய பணத்தை திரைப்படங்கள், ரியல் எஸ்டேட், ஹோட்டல்களில் மூதலீடு செய்தது மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கும் நிதி அளித்துள்ளதாக என்சிபி அதிகாரி தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய திமுக தலைவர்கள் உட்பட அனைவரின் தொடர்பு குறித்தும் என்சிபி விசாரணை நடத்தி வருவதாக கூறியிருக்கும் அண்ணாமலை, இந்த விவகாரத்தில் எத்தனை காலம் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருப்பார் பார்ப்போம்  என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User